ஒடிசாவில் பலத்த பாதுகாப்புடன் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகல தொடக்கம்

ஒடிசாவில் பலத்த பாதுகாப்புடன் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகல தொடக்கம்
Updated on
1 min read

நவீன் பட்நாயக், அமித் ஷா உட்பட பக்தர்கள் பங்கேற்பு

உலக பிரசித்திப் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஒடிசாவில் நடக்கும் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை உலகப் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் மரத்தினலான 3 புதிய ரதம் செய்யப்பட்டு, அதில் ஜெகந்நாதர், உப தெய்வங்களான பலபத்ரா, தேவி சுபத்ரா தெய்வச் சிலைகள் வைக்கப்படும். பின்னர் 3 ரதங்களும் அருகில் உள்ள கன்டிச்சா கோயிலை நோக்கி புறப் படும். தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் இந்த ரத யாத்திரை திருவிழாவைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புரியில் ஒன்று திரள்வார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக் கான புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து மாநில டிஜிபி கே.பி.சிங் கூறும்போது, ‘‘ரத யாத்திரையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.

முன்னதாக தேரில் ஜெகந்நாதர் எழுந்தருளியதும், புரி மகாராஜா கஜபதி திவ்யசிங் தேவ் சிறப்பு பூஜைகள் நடத்தினார். அதன் பின், மேள, தாளங்கள் முழங்க ரத யாத்திரை புறப்பாடு நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் புரி ஜெகந்நாதரை பக்தி முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in