

மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் காங்கிரஸுக்கும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த மாநிலத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமானோர் உள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் முஸ்லிம் மதத் தலைவரான மவுலானா தவுக்கீர் ராஸா ஆதரவு அளித்த கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அதனால் இந்த முறை அவரின் ஆதரவைப் பெற பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
பரேலியில் உள்ள தவுக்கீர் ராஸாவை, அந்த தொகுதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர் உமேஷ் கவுதம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினார். இவரைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் முராதாபாத் வேட்பாளர் ஹாஜி யாகூப் குரேஷி ஆதரவு கேட்டுள்ளார்.
2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தவுக்கீர் ராஸா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அக்கட்சிக்கு ஆதரவாக பிஹாருக்குச் சென்று பிரச்சாரம் செய்தார்.
இதுகுறித்து தவுக்கீர் ராஸா விற்கு நெருக்கமானவர்கள் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறும்போது, “எந்த கட்சிக்கு ஆதரவு தருவது என்பதை இன் னும் ஓரிரு நாளில் மவுலானா தவுக் கீர் ராஸா அறிவிப்பார்” என்றனர்.
2010-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முலாயம் சிங் தலைமை யிலான சமாஜ்வாதி கட்சிக்கும், 2013-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும் மவுலானா தக்கீர் ராஸா ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.