ஆந்திரா, ஜார்க்கண்ட், மணிப்பூர் மாநிலங்களில் மதிய உணவு திட்ட மாணவர்கள் பட்டியலில் 4.3 லட்சம் போலி பயனாளிகள்: ஆதார் எண் இணைப்பின் மூலம் தெரியவந்தது

ஆந்திரா, ஜார்க்கண்ட், மணிப்பூர் மாநிலங்களில் மதிய உணவு திட்ட மாணவர்கள் பட்டியலில் 4.3 லட்சம் போலி பயனாளிகள்: ஆதார் எண் இணைப்பின் மூலம் தெரியவந்தது
Updated on
1 min read

ஆந்திரா, ஜார்க்கண்ட், மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்கள், மதிய உணவு திட்டத்தில் சுமார் 4.3 லட்சம் போலி பயனாளிகளை கண்டறிந்து நீக்கியுள்ளன. இதற்கு ஆதார் எண் உதவியாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலவச மதிய உணவு அளித்து வருகின்றன. இந்நிலையில் மதிய உணவு பெறும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இம்மாதம் அறிவித்தது. இதற்கு சமூகநல அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு இனி மதிய உணவு கிடைக்காது என புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் மதிய உணவு திட்ட மாணவர்கள் தொடர்பாக 2015-16 மற்றும் 2016-17ம் ஆண்டுக் கான புள்ளிவிவரத்தை ஆந்திரா, ஜார்க்கண்ட், மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளன. இதன் மூலம், கூடுதல் தொகை பெறுவதற் காக 3 மாநிலங்களிலும் பல அரசுப் பள்ளிகளில் பெயரளவில் கூடுதல் மாணவர்கள் காண்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உதாரணமாக, ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 29 லட்சம் மாணவர்களுக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் மதிய உணவு திட்ட பட்டியலில் 2.1 லட்சம் மாணவர்கள் பெயரளவில் இருந்தது தெரிய வந்துள்ளது. இது மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அப்பெயர்கள் நீக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “மதிய உணவு திட்ட மாணவர்கள் குறித்து மாநில அரசுகள் அளித்துள்ள புள்ளி விவரத்தை ஒப்பிட்டு ஆராயும் பணி தொடர்கிறது. அனைத்து மாநிலங் களிடமும் புள்ளி விவரம் பெற்று ஆய்வுப்பணி முடிந்த பின், போலி பயனாளிகள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என கருதுகிறோம்” என்றார்.

ஜார்க்கண்டில் இதுவரை 89 சதவீத மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 2.2 லட்சம் போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இதுபோல் மணிப்பூரில் இதுவரை 1,500 போலி பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மத்திய உணவு திட்டச் செலவை 60:40 என்ற விகிதாச்சாரத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏற்கின் றன. வடகிழக்கு மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் 90:10 என உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in