

மத்திய பட்ஜெட்டில் ரூ.3 லட்சத் துக்கு மேற்பட்ட ரொக்க பரிவர்த்த னைக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது. இந்த தடை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.
கறுப்புப் பணத்தை மீட்க உச்ச நீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதி ஷா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு மத்திய அரசிடம் பல்வேறு பரிந் துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதில் பெருந்தொகை ரொக்க பரிவர்த்தனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பட் ஜெட்டை தாக்கல் செய்த நிதி யமைச்சர் அருண் ஜேட்லி கூறிய போது, சிறப்பு புலனாய்வுக் குழு வின் பரிந்துரைப்படி ரூ.3 லட்சத் துக்கு மேற்பட்ட ரொக்க பரிவர்த்த னைகளுக்கு தடை விதிக்கப் படுகிறது.
இந்த தடை ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று தெரி வித்தார். சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் நீதிபதி ஷா கூறிய தாவது: மத்திய அரசின் அறி விப்பு நல்ல முடிவு. பல்வேறு நாடு களில் பெருந்தொகையிலான ரொக்க பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை பின்பற்றி இந்தியா விலும் தடை விதிக்க பரிந்துரைத் தோம். அதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதே போல தனிநபர் ரூ.15 லட்சத் துக்கு மேல் ரொக்க பணம் வைத்திருக்கக்கூடாது என்றும் பரிந்துரை செய்திருந்தோம். அந்த பரிந்துரை ஏற்கப்பட வில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.