மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளருக்கு ரூ.25,000 நிதியுதவி

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளருக்கு ரூ.25,000 நிதியுதவி
Updated on
1 min read

பிஹாரில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.25,000 நிதி யுதவி வழங்கப்படும் என, மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறி வித்துள்ளார்.

பிஹாரில் குழந்தைத் தொழி லாளர்களாக இருந்து மீட்கப் பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு திட்டங்களை மாநில அரசு வகுத் துள்ளது. அவை முறையாக செயல் படுவதை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து, அவர் களின் குறைகளை போக்கவும், குழந்தை தொழிலாளர் கண் காணிப்பு அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்து, முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், ‘‘மறுவாழ்வு உதவிகள் மட்டுமின்றி, குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் பொருளாதார ரீதி யாக அவர்கள் தன்னம்பிக்கை பெறுவர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in