இந்தியா
கண்ணில் ஆசிட் ஊற்றிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை
பிஹார் மாநிலத்தில், கடந்த 1989-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி, சொத்துத் தகராறு காரணமாக, உபேந்திர சிங் என்பவரின் ஒரு கண்ணில் ரத்தன் சிங், டானிக் சிங், பிரஜ்தேவ் சிங் ஆகிய மூவரும் ஆசிட் ஊற்றினர்.
இதில், உபேந்திர சிங்கின் பார்வை நிரந்தரமாக பறிபோனது. இதுதொடர்பான வழக்கு 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி இஸ்ரத்துல்லா, குற்றவாளிகள் ரத்தன் சிங், டானிக் சிங் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மற்றொரு குற்றவாளியான பிரஜ்தேவ் சிங்குக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
