Last Updated : 21 Jun, 2016 09:12 AM

 

Published : 21 Jun 2016 09:12 AM
Last Updated : 21 Jun 2016 09:12 AM

அமர்நாத் யாத்திரைக்கு பாக். இடையூறு செய்யும் அபாயம்: காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் அச்சம்

அமர்நாத் குகைக் கோயிலுக்கான யாத்திரை ஜூலை 2-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதற்கு பாகிஸ்தான் மற்றும் அதன் அனு தாபிகள் இடையூறு செய்யும் அபாயம் உள்ளதாக ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஜம்மு வில் நேற்று உயரதிகாரிகளிடம் நிர்மல் சிங் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமர்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை பாகிஸ்தானும் தேச விரோத சக்திகளும் தீவிர வாதிகளும் விரும்ப மாட்டார்கள். இதற்கு இடையூறு ஏற்படுத்த அவர்கள் கண்டிப்பாக முயற்சி செய்வார்கள். எனவே இது தொடர் பாக அனைத்து கோணங்களிலும் நாங்கள் ஆராய்ந்து அவர்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டோம். ராணுவமும் பிற பாதுகாப்பு படைகளும் விழிப்புடன் பணியாற்றி வருகின்றன.

ஜம்மு நகரில் 2 கோயில்களில் சேதம் விளைவிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள சக்திகள், அங்குள்ள சுமூக சூழலை கெடுக்க முயற்சிக்கலாம். இதுபோன்ற சம் பவங்கள் எதிர்காலத்தில் நிகழாத வகையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் காலமாக இது உள்ளது. இந்நிலையில் இங்குள்ள சூழலை கெடுக்க தேச விரோத சக்திகள் முயற்சிக்கலாம். ஜம்மு காஷ்மீரில் அமைதி சீர்குலைக் கப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.

ஜம்மு கோயில்களில் சேதம் ஏற் படுத்தியது தொடர்பாக பல்வேறு அமைப்புகளும் விசாரித்து வரு கின்றன. ஜம்மு நிலவரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எல்லைக்கு அப்பால் இருந்து தூண்டிவிடப்படுகின்றன என்று கேட்கிறீர்கள். அதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது.

மாநிலத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் ஜம்மு அமைதியாக உள்ளது. மதவாதத்தை தூண்டு வதன் மூலம் இங்கு அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான், ஐ.எஸ்., அல்லது அவர்களின் ஆதரவாளர் கள் முயற்சிக்கலாம். என்றாலும் இது வரை இதற்கு ஆதாரங்கள் கிடைக்க வில்லை. போலீஸார் இது தொடர் பாக ஆராய்ந்து வருகின்றனர்.

காஷ்மீர் பண்டிட்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு தனி குடி யிருப்புகள் ஏற்படுத்துவது நெறி யற்ற செயல் அல்ல. சிலர் இப்பிரச் சினையை பெரிதாக்குகின்றனர்.

இந்தக் குடியிருப்புகள் பண்டிட் கள் மட்டுமின்றி இடம்பெயர்ந்த அனைத்து மதத்தினரையும் உள் ளடக்கியதாக இருக்கும். இவ்வாறு நிர்மல் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x