

யூரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத் துள்ளது.
இதுதொடர்பாக லெப்டினென்ட் ஜெனரல் ரன்வீர் சிங் டெல்லி யில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:
எல்லையில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும். ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதில் தாக்குதல் நடத்தும் உரிமை எங்களுக்கு உள்ளது. சரியான நேரத்தில் தகுந்த பதிலடி கொடுப் போம். எந்த இடம் என்பதை எங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுப் போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே யூரி தாக்குதல் குறித்து ராணுவ தரப்பில் உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.