

முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான பூட்டாசிங், சமாஜ்வாதி கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தார். இவர், அக்கட்சி சார்பில் ராஜஸ்தானின் ஜலோர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை, சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளரும், தேசிய செய்தி தொடர்பாளருமான ராம் கோபால் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு காலத்து காங்கிரஸின் தலை வரான பூட்டாசிங், எட்டு முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். முன் னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் நரசிம்மராவின் ஆட்சியில், உள்துறை உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்த பூட்டாசிங், பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்தவர்.
கடந்த 2004-ல் பிஹாரின் கவர்னராக பொறுப்பேற்றவர், அங்கு அமைய இருந்த பாஜக-ஐக்கிய ஜனதாவிற்கு வாய்ப் பளிக்காமல் சட்டசபையை கலைத்தார். இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பில் கண்டிக்கப்பட்டதால், இரண்டு வருடங்களில் பதவி இழந்தார்.
இதன் பிறகு கடைசியாக 2007 முதல் 2010 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்தவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் விருப் பம் வந்துள்ளது. இதற்கு காங்கி ரஸ் மறுப்பு தெரிவிக்கவே பூட்டாசிங், சமாஜ்வாதியில் இணைந்து ராஜஸ்தானில் போட்டியிடுவதாகக் கருதப்படுகிறது.