கர்நாடக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பாவின் பதவியை பறிக்க வேண்டும்: பாஜக தலைவர்களிடம் எடியூரப்பா வலியுறுத்தல்

கர்நாடக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பாவின் பதவியை பறிக்க வேண்டும்: பாஜக தலைவர்களிடம் எடியூரப்பா வலியுறுத்தல்
Updated on
1 min read

கர்நாடக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பாவின் பதவியைப் பறிக்க வேண்டும் என எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநில பாஜக தலை வரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவுக்கும், ஈஸ்வரப்பா வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் எடியூரப்பாவையும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் ஈஸ்வரப்பா பகிரங்கமாகவே விமர்சித்து வருகிறார். வரும்‌ மே 10-ம் தேதிக்குள் எடியூரப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என மேலிடத்துக்கு கெடு விதித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள எடியூரப்பா, டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ், மூத்த தலைவர் ராம்லால் ஆகியோரிடம் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். “கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் ஈஸ்வரப்பா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஈஸ்வரப்பாவின் சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

இதேபோல டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அகில இந்திய பசவ ஜெயந்தி விழாவில் எடியூரப்பாவும் பங்கேற்றார். அப்போது “கர்நாடகாவில் அடுத்த தேர்தலில் பாஜக வெற்றிபெற வேண்டுமானால், பசவண்ணர் வழிவந்த‌ லிங்காயத்து சாதியினருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கட்சிக்கு எதிராக செயல்படும் ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மோடியிடம் எடியூரப்பா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in