

திரிபுரா மாநிலத்தில் நேற்று பிற்பகல் 2.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
தலாய் மாவட்டத்தில் அம்பாசா என்ற இடத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 28 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ஆய்வு மைய தகவலில் கூறப்பட்டது.
ரிக்டர் அளவில் 5.7 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் அகர்தலா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் பீதியடைந்து, வீடு, அலு வலகம் மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். தலாய், உனகோடி மாவட்டங்களில் பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன.
அசாமிலும் குவஹாத்தி உட்பட பல நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆங்காங்கே மக்கள் பீதியடைந்து கட்டிடங் களை விட்டு வெளியேறினர். கரிம்கஞ்ச், ஹைலகண்டி, கச்சார், திமா ஹசாவோ ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.