

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் தசீம் அக்தரை ஏப்ரல் 2-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
மேற்குவங்கத்தில் இந்திய நேபாள எல்லையில் தசீம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நேற்று தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கியத் தலை வராக செயல்பட்ட தசீம் அக்தர், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள் ளார். இந்தியாவில் நிகழ்த் தப்பட்ட பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் இவர் நேரடியாகத் தொடர்பு உடையவர். எனவே இவரை காவலில் வைத்து விசாரிப்பதன் மூலம் பல உண்மைகளையும், தீவிரவாத சதித்திட்டங்களையும் வெளிக் கொண்டு வர முடியும் என்று டெல்லி போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை ஏப்ரல் 2-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜஸ்தானில் சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் வகாஸ், சாகிப், மகரூர், வக்கார் ஆகியோரும் முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களையும் ஏப்ரல் 2-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.