கோரக்நாத் கோயிலில் தொண்டாற்றும் முஸ்லிம் இளைஞர்: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அன்புக்குரியவர்

கோரக்நாத் கோயிலில் தொண்டாற்றும் முஸ்லிம் இளைஞர்: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அன்புக்குரியவர்
Updated on
1 min read

உத்தரபிரசேத்தில் புகழ்பெற்ற கோரக்நாத் கோயிலில் தொண் டாற்றும் தன்னார்வலர்களில் முகம்மது (30) என்ற முஸ்லிம் இளைஞரும் இடம்பெற்றுள்ளார். இவர், கோயிலின் தலைமை துறவியும், உ.பி.முதல்வருமான யோகி ஆதித்ய நாத்தின் அன்புக்குரியவர்.

கோரக்நாத் கோயிலை ஒட்டி 2 ஏக்கரில் கோசாலை அமைந் துள்ளது. இங்கு 500-க்கும் மேற் பட்ட பசுக்கள் உள்ளனன. இவற்றை பாரமரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டுள் ளனர். இவர்களில் ஒருவர் முகம்மது (30). ஏழை குடும் பத்தைச் சேர்ந்த முகம்மது தனது 10-ம் வயது முதல் இங்கு தொண்டாற்றி வருகிறார். உண வுடன் சிறு தொகை அவருக்கு ஊதியமாகத் தரப்படுகிறது. பசுக்களைக் குளிப்பாட்டுவது, அவற்றுக்கு உணவளிப்பது உள் ளிட்ட பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து முகம்மது கூறும் போது, “குழந்தைப் பருவத்தில் இருந்தே இங்கு இருக்கிறேன். இதுதான் எனது வீடு. என் மீது யோகிஜி மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். எனது வாழ்நாள் முழுவதும் நான் இங்கு இருப்பேன்” என்றார்.

முகம்மதுவின் தந்தையும் இங்குதான் பணியாற்றினார். அவர் தற்போது இங்கிருந்து 40 கி.மி. தொலைவில் உள்ள மகாராஜ்கஞ்ச் நகரில் உள்ள தனது வீட்டில் வசிக்கிறார். முதுமைக்கால பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மருத் துவ செலவை யோகி ஆதித்ய நாத் ஏற்றுக்கொண்டுள்ளார்.

“யோகிஜி ஒரு மதவாத தலைவர் என்று கூறப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் மதப் பாகு பாடு காட்டமாட்டார். உ.பி. முதல்வ ராக அனைத்து சமூகத்தின் வளர்ச்சியையும் அவர் உறுதி செய்வார்” என்கிறார் முகம்மது.

முகம்மது, பசுக்களைப் பராமரித்தாலும், தொழுகை உட்பட இஸ்லாமிய நடைமுறை களைப் பின்பற்றி வருகிறார்.

கோசாலையில் முகம்மது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in