கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் இன்று தொடக்கம்

கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் இன்று தொடக்கம்
Updated on
1 min read

கங்கை நதியைச் சுத்தப்படுத்து வதற்காக 300 திட்டங்களின் ஒருங் கிணைப்புத் திட்டமான ‘நமாமி கங்கா’ திட்டம் இன்று முதல அமலுக்கு வருகிறது.

கங்கை நதியைத் தூய்மைப் படுத்த மத்தியில் உள்ள பாஜக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. நமாமி கங்கா திட்டம் இன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

முதல்கட்டமாக நீர்த்துறை, மயான கட்டுமானம்/புனரமைப்பு, ஆற்றங்கரைகளை அழகுபடுத்து தல், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிர்மாணித்தல்/பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், கங்கை நதிப்படுகை அமைந்துள்ள 5 மாநிலங்களிலும் 104 இடங்களில் ஒரே சமயத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளன.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, உமா பாரதி, நரேந்திர தோமர், மகேஷ் சர்மா ஆகியோர் திட்டப்பணிகளை ஹரித்வாரில் தொடங்கி வைக்கின்றனர். இந் நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முதல் வர் ஹரீஷ் ராவத் பங்கேற்கிறார்.

“வரலாற்று நிகழ்வாக, முழு நதியும் தூய்மைப்படுத்தப்பட உள்ளது. வரும் அக்டோபரில் கங்கை தூய்மைத் திட்டம் முதல் அலகை காண்பிப்போம். அடுத்த அலகு 2 ஆண்டுகளில் நிறை வடையும்” என உமா பாரதி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in