விரைவில் அமலாகிறது ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கட்டாய ஆதார் எண்

விரைவில் அமலாகிறது ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கட்டாய ஆதார் எண்
Updated on
1 min read

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டம் விரைவில் அமலாகும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய எண்ணிக்கைகளில் ரயில்வே டிக்கெட்டுகளை புக் செய்வதை தடுப்பதும், மோசடியான டிக்கெட் முன்பதிவுகளையும், ஆள்மாறாட்டத்தையும் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டுகளுக்கான சலுகைகளைப் பெற வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது, இதற்கான 3 மாத வெள்ளோட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2017-18-க்கான புதிய வர்த்தக திட்டத்தை வெளியிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டத்துடன், நாடு முழுதும் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 6,000 பி.ஓ.எஸ் இயந்திரங்களையும், நாடு முழுதும் 1,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பணமற்ற பரிவர்த்தனையை வளர்க்கும் விதமாக ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப் ஒன்றையும் மே மாதம் அறிமுகம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஐஆர்சிடிசி இணையத்தில் ஒருமுறை பதிவாக ஆதார் எண் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய அளவில் டிக்கெட்டுகளை பிளாக் செய்வது தடுக்கப்படும்” என்று மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக ரயில்வே மென்பொருள் ஒன்றையும் ரயில்வே துறை தயாரித்து வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த புதிய வர்த்தகத் திட்டத்தில் மலைவாசஸ்தலங்களை இணைக்க புதிய சுற்றுலா ரயில்களை அறிமுகம் செய்யவும் முடிவெடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in