பெண் இன்ஜினீயர் பலாத்கார கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு

பெண் இன்ஜினீயர் பலாத்கார கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு
Updated on
1 min read

பெண் சாப்ட்வேர் இன்ஜினீயர் பலாத்கார கொலை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து புனே நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்தவர் நயனா புஜாரி (28). இவர் அங்குள்ள நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த 2009 அக்டோபர் 7-ம் தேதி வீட்டுக்கு செல்வதற்காக அவர் காத்திருந்தார்.

அப்போது அதே நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றிய யோகேஷ் ராத் என்பவர் காரில் அங்கு வந்தார். அந்த காரில் மகேஷ் தாக்குர், விகாஸ் காதம் மற்றும் நிறுவன காவலாளி ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் இருந்தனர்.

காரில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக ராத் கூறியதை தொடர்ந்து அந்த காரில் நயனா ஏறினார். ஆனால் 4 பேரும் அவரை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர். பின்னர் அவரை கொலை செய்து புனேவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ராஜ்குரு நகரில் உடலை வீசி சென்றனர்.

போலீஸ் விசாரணையில் சிசிடிவி வீடியோ பதிவில், நயனாவை 4 பேரும் காரில் அழைத்துச் செல்வது தெரியவந்தது. இதில் காவலாளி ராஜேந்திர சவுத்ரி அரசு தரப்பு சாட்சியாக மாறினார்.

இந்த வழக்கு புனே செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 7 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு ராஜேந்திர சவுத்ரியை தவிர்த்து இதர 3 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி யங்கர் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி நேற்று அறிவித்தார்.

அதன்படி யோகேஷ் ராத், மகேஷ் தாக்குர், விகாஸ் காதம் ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ராஜேந்திர சவுத்ரி மட்டும் விடுதலை செய்யப்பட்டார். நயனா புஜாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in