Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

முலாயம் குடும்பத்தினர் சொந்த ஊரில் கொண்டாட்டம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

உத்தரப் பிரதேசம் முசாபர்நகர் கலவரத்தில் நூற்றுக்கணக் கானோர் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தவிக்கும்போது ஆளும் சமாஜவாதி தலைவர் முலாயம் சிங்கின் குடும்பத்தினர் அவர்களது சொந்த ஊரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேசம் இட்டா மாவட்டத்தில் உள்ள சைபை கிராமம் முலாயம் சிங்கின் பூர்விக கிராமம் ஆகும். அவரது நெருங்கிய உறவினர் ரன்வீர் சிங் யாதவின் நினைவாக இங்கு ஆண்டுதோறும் பிரமாண்ட திருவிழா நடத்தப்படுகிறது. 1996 முதல் நடத்தப்பட்டு வரும் இந்த விழா கடந்த 26-ம் தேதி தொடங்கியது.

இருவாரங்கள் நடைபெறும் இவ்விழாவில் முலாயம் சிங், அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மற்றும் குடும் பத்தினர் அனைவரும் பங்கு பெற்றுள்ளனர். விழாவையொட்டி அந்த மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் அனைவ ரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் முஷாபர்நகரில் ஏற்பட்ட வகுப்பு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப் பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். இந்த நேரத்தில் முலாயம் குடும்பத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது தேவைதானா என்று பல்வேறு கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா நிருபர்களிடம் பேசியபோது, நிவாரண முகாம்க ளில் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர், மறுபக்கம் முலாயம் குடும்பத்தினர் கேளிக்கை கொண் டாட்டங்களில் ஈடுபட்டு வருகின் றனர். உயிரிழந்த குழந்தைகளின் சாபம் முலாயமை பின்தொடரும் என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியபோது, நிவாரண முகாம்கள் சிலவற்றை அரசு மூடிவிட்டது. ஆனால் இங்கு பிரமாண்ட விழா நடத்தப்பட்டு அரசு இயந்திரம் தவறாகப் பயன் படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக கருத்துத் வெளியிட்டுள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், இந்த விழா விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பது எனக்கு முன்னரே தெரியும் என்று தெரிவித்தார்.

சமாஜவாதி செய்தித் தொடர்பாளர் ரஜேந்திர சவுத்ரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முஷாபர்நகர் முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு செய்து வருகிறது, எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x