

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 5 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப் பட்டதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
ராஞ்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மாவோயிஸ்ட்களும் ஆடைகள் வாங்கிக் கொண்டிருந் தபோது, இவர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, ஒரு ஏகே 56 ரக துப்பாக்கி மற்றும் ரகசிய குறிப்புகள் கொண்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மாவோயிஸ்ட்களிடம் போலீ ஸார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 24 மாவட்டங்களில் 18-ல் மாவோ யிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட் பிரச்சினை குறித்து மாநில காவல் துறை தலைவர் டி.கே. பாண்டே நேற்று கூறியதாவது:
ஜார்க்கண்டில் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை அழிக்க 20 சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் நாள்தோறும் வனப்பகுதியில் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டின் இறுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.