

டெல்லியில் ஆட்சியை இரண்டாவது முறையாகப் பிடித்தும், பஞ்சாபில் தற்போது பெரும் கட்சிகளை அச்சுறுத்தும் விதத்திலும் தேர்தல் களத்தில் குதித்துள்ள ஆம் ஆத்மியை முற்றிலும் நெருக்கும் விதமாக கடந்த ஆண்டு ஜூன் முதல் 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு துணை நிலை ஆளுநரை வைத்து மத்திய அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக கேஜ்ரிவால் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
ஞாயிறன்று அமானத்துல்லா கான் என்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளனர், காரணம், பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல் இத்யாதி இத்யாதி...
நரேஷ் யாதவ்: ஜூன் 24-ம் தேதியன்று குரானை நிந்தனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரகாஷ் ஜார்வால்: பெண் ஒருவரை தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
சோம்நாத் பாரதி: தனது ஆதரவாளர்களைத் தூண்டி விட்டு பெண் ஒருவரை தாக்க வைத்தார் என்ற குற்றச்சாட்டில் ஜூலை மாதம் புகார் பதிவு செய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. இவர் செப்டம்பர் 2015-ல் அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் குடும்ப வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மனோஜ் குமார்: 2015 ஜூலை மாதம் இவரது மனைவி அளித்த புகாரின் பேரில் குடும்ப வன்முறை தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டார். மேலும் நில மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினேஷ் மொஹானியா: 60 வயது பெண்மணியை தாக்கியதாகவும் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
மஹீந்தர் யாதவ்: ஆர்ப்பாட்டம் ஒன்றில் அரசு ஊழியர் ஒருவரை தாக்கியதாகவும் ஆர்பாட்டத்தில் கலவரம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
அகிலேஷ் திரிபாதி: 2013-ம் ஆண்டு ஆர்பாட்டம் தொடர்பாக நவம்பர் 2015-ல் கைது செய்யப்பட்டார்.
சுரீந்தர் சிங்: என்.டி.எம்.சி. பணியாளரை தாக்கியதாக ஆகஸ்ட் 2015-ல் கைது செய்யப்பட்டார்.
ஜிதேந்தர் சிங் தோமர்: போலி கல்விச்சான்றிதழ் அளித்த புகாரில் ஜூன் 2015-ல் கைது செய்யப்பட்டார்.