

ஐபிஎல் சூதாட்டப் புகார் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு எதிரான பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதுகுறித்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு கூறுகையில் "புகாருக்கு போதுமான ஆதாரம் இருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம்" என மனுதாரரிடம் கூறியுள்ளது.
வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்த அந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய உள்துறை முன்னாள் செயலாளரும் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தவருமான ஆர்.கே. சிங் சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அதில், ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அதை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தடுத்து நிறுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
அந்த தொழிலதிபருக்கு இந்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆர்.கே. சிங்கின் இந்தக் குற்றச்சாட்டு மிகவும் அபாய கரமானது. எனவே, இதுவிஷ யத்தில் நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; இந்த வழக்கில் ஷிண்டே மற்றும் ஆர்.கே. சிங் ஆகிய இருவரையும் பிரதிவாதி களாக சேர்க்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.