

திருப்பதி ஏழுமலையானைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடியவர் அன்னமாச்சாரியா. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், தாள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு அங்கு 108 அடி உயரத்தில் முழு உருவ சிலை தேவஸ்தானம் சார்பில் நிறுவப்பட்டது. மேலும் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை அன்னமாச்சாரியாவின் 514-வது நினைவு தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த 4 நாட்களும் தாள்ளப் பாக்கத்தில் அன்னமாச்சாரியா வின் கீர்த்தனைகள் பாடப்படும். மேலும் சங்கீத கச்சேரிகளும் நடத் தப்படும் என தேவஸ்தானம் வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. இதையொட்டி, திருப்பதி யில் உள்ள மலையடிவாரத்தில் தேவஸ்தானத்தின் திட்ட அதிகாரி முக்தேஷ்வர ராவ் தலைமையிலான பஜனை கோஷ்டியினர் 1000 பேர் நேற்று அதிகாலையில் திருப்படி திருவிழா நடத்தினர்.