

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியை இன்று ஒலிபரப்ப தலைமைத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அவரது வானொலி நிகழ்ச்சி இந்த மாதம் ஒலிபரப்பாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு அணுகி அனுமதி கோரியது. இதை ஏற்றுக் கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையம் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியை இன்று ஒலிபரப்ப அனுமதி அளித்தது.
இதில் பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மையமாக வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.