

காஷ்மீரில் டிஎஸ்பி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழைய ஸ்ரீநகர் நவெட்டா பகுதி ஜும்மா மசூதியில் கடந்த 22-ம் தேதி இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் டிஎஸ்பி முகமது அயூப் பண்டிட் வன்முறை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் படை அமைக் கப்பட்டுள்ளது. தனிப்படை விசா ரணையில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மீதமுள்ளோரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநில டிஜிபி வைத் நிருபர்களிடம் கூறிய போது, டிஎஸ்பியை அடித்துக் கொன்றவர்கள் யாரும் தப்ப முடியாது. சம்பவம் நடந்தபோது ஹூரியத் மாநாடு தலைவர் மிர்வைஸ் உமர் பரூக்கும் மசூதியில் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர் பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.