டெல்லி மாநில பாஜக தலைவர் விஜய்கோயல் ராஜினாமா

டெல்லி மாநில பாஜக தலைவர் விஜய்கோயல் ராஜினாமா
Updated on
1 min read

டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் விஜய்கோயல் தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு பதிலாக ஹர்ஷவர்தனை அக்கட்சியின் தலைமை (இன்று) புதன்கிழமை நியமித்துள்ளது.

டெல்லியின் கிருஷ்ணாநகர் தொகுதியில் ஐந்தாவது முறை எம்.எல்.ஏவான ஹர்ஷவர்தன், டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்.

இதனால், தன் தலைமை மீது அதிருப்தியாக இருந்த விஜய்கோயலுக்கு தற்போது நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் இருந்து எம்.பி,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இனி, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பாஜக, ஹர்ஷவர்தன் தலைமையில் சந்திக்கும். டெல்லியிலும் நிலவும் ஜனாதிபதி ஆட்சிக்கு பின் ஒருவேளை மறுதேர்தல் அறிவித்தால், அதையும் ஹர்ஷவர்தன் தலைமையில் சந்திக்க வேண்டி, பாஜக இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in