தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘வியாபம்’ ஊழல் ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் உத்தரவு

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘வியாபம்’ ஊழல் ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் உத்தரவு
Updated on
1 min read

தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ் கோரப்பட்ட வியாபம் ஊழல் தொடர்பான விவரங் களை சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய ஆய்வுகளுக்குப் பின் அளிக்க வேண்டும் என மத்திய பொது தகவல் அதிகாரிக்கு, பிரதமர் அலுவலகம் உத்தர விட்டுள்ளது.

அஜய் துபே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திட மிருந்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி சில தகவல்களைக் கோரியிருந்தார்.

கடந்த மார்ச் 18-ம் தேதி, வியாபம் முறைகேடு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கும் சந்தித்துப் பேசினர்.

அதுதொடர்பான ஆவணங் கள், மோடிக்கு திக் விஜய் சிங் கொடுத்த வியாபம் முறைகேடு விவரங்கள் அடங்கிய பென் டிரைவில் உள்ள தகவல்களைக் கோரியிருந்தார்.

ஆனால், அந்த விவரங்க ளைத் தர இயலாது என பிரதமர் அலுவலகம் முதலில் மறுத்து விட்டது. அந்த விவரங்கள் அளிக்கப்பட்டால், அது அலுவலக ஆதாரங்களுக்கு இடையூறு விளைவிக்கும் என தெரிவிக்கப் பட்டது.

இதையடுத்து அஜய் துபே, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மேல்முறையீடு செய்தார். மேலும், தனிப்பட்ட முறையில் இம்முறையீட்டைக் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து, அக்டோபர் 12-ம் தேதி, மேல்முறையீட்டு அதிகாரியுடன் தொலைபேசியில் உரையாடினார் அஜய் துபே.

குறிப்பிட்ட தகவல்களை மட்டும் கோரி விண்ணப்பிக்கப் பட்டதால், அதனை நிராகரித்தது தவறு என மேல்முறையீட்டு அதிகாரி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தகவல் கோருபவர் கேட்கும் தகவல்களை ஆய்வுக்குப் பிறகு உரிய காலத்துக்குள் அளிக்கும்படி மத்திய பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாபம் முறைகேட்டில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தொடர்பு இருப்பதற்கு உறுதி யான ஆதாரங்கள் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி யிருந்தது.

இதுதொடர்பாகவே திக் விஜய் சிங் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in