

பாகிஸ்தான் பாடகர் அட்னான் சமிக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவர் இந்தியக் குடிமகனாகிறார்.
பாகிஸ்தானின் பிரபல பாடகர் அட்னான் சமி(46). லாகூரில் பிறந்த இவர் 2001 மார்ச் 31-ல் இந்தியாவுக்கு முதல்முறையாக வந்தார். பாகிஸ் தானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பெற்ற ஓராண்டு விசாவில் அவர் இந்தியா வந்திருந்தார். அவரது விசா அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது.
தற்போது சமி, இந்தியாவில் மூன்று மாத நீட்டிக்கப்பட்ட விசாவில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை தனது இரண்டாவது தாயகமாக கருதி வருகிறார்.
இதற்கிடையில், அவரது பாகிஸ் தான் பாஸ்போர்ட் கடந்த மே 26-ம் தேதியுடன் காலாவதியானது. அதை பாகிஸ்தான் அரசு புதுப்பிக்க வில்லை. இதனால், இந்தியாவில் தங்கிக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி கோரி, உள்துறை அமைச்ச கத்தை அணுகினார் அட்னான் சமி. கடந்த மே மாதம் உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத் தில், மனிதாபிமான அடிப்படை யில் இந்தியாவில் தங்க அனுமதிக்கும்படி கோரினார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப் பட்டுள்ளது.