பி.வி.சிந்து வென்றது வெண்கலம்! சாய்னாவுக்கு பதில் சானியா: பிழைகள் மலிந்த கர்நாடக பாடப்புத்தகங்கள்

பி.வி.சிந்து வென்றது வெண்கலம்! சாய்னாவுக்கு பதில் சானியா: பிழைகள் மலிந்த கர்நாடக பாடப்புத்தகங்கள்
Updated on
1 min read

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து வெண்கலம் வென்றதாகவும், சாய்னா நெவாலுக்குப் பதில் சானியா என்றும் கர்நாடகா மாநில பாடப்புத்தகங்களில் பிழைகள் மலிந்து கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.

2 ஆண்டுகள் சுமார் 150-க்கும் மேற்பட்ட கல்வியாளர்களுடன் கலந்துரையாடி 6 கோடி பாடப்புத்தகங்களை சுமார் ரூ.144 கோடிக்கு அச்சடித்த கர்நாடகா மாநில பாடப்புத்தகங்களில் அச்சுப்பிழைகளும் தகவல் பிழைகளும் ஏராளம் என்ற புகார் எழுந்துள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் சில பக்கங்களில் உள்ளடக்கங்கள் இல்லை, வரைபடங்கள் இல்லை. 7-ம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில் 24-ம் பக்கம் முதல் 57-ம் பக்கம் வரை காணவில்லை. 10-ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 53-84 பக்கங்கள் தலைகீழாக அச்சடிக்கப்பட்டுள்ளன. 7-ம் வகுப்பு கணிதப் பாடப் புத்தகத்தில் வினாக்களைக் காணோம்.

இதோடு விளையாட்டு குறித்த பக்கங்களில் ஏகப்பட்ட தகவல் பிழைகள் அச்சுப்பிழைகள்.

இதனை கர்நாடக கல்வி அமைச்சர் தன்வீர் சைத்தின் கவனத்துக்கு தொலைக்காட்சி சேனல் ஒன்று கொண்டு சென்ற போது, பிழைகள் இப்போது மட்டுமல்ல பாஜக ஆட்சியிலும் பிழைகள் மலிந்து கிடந்தன. அச்சுக்கூடங்களில் இவ்வாறு தவறுகள் நிகழ்வது சகஜம், இருந்தாலும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் குமார் கூறும்போது, “பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார் என்பது பெரிய அவமதிப்பாகும். குறைந்தது யார் என்ன பதக்கம் வென்றார்கள் என்பதையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? கடினமாக உழைத்து வென்ற வெள்ளிப்பதக்கத்தை வெண்கலம் என்றால் அது அவமதிப்பல்லாமல் வேறு என்னவாம்?” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in