டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்

டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் ‘கூர்க்காலாந்து’ தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்றுடன் 7-வது நாளை எட்டியுள்ளது.

டார்ஜிலிங்கின் சிங்மாரியில் இருந்து பேரணியாகச் சென்ற கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தொண்டர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று முன்தினம் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஜிஜேஎம் தொண்டர் ஒருவர் பலியானார். பாதுகாப்புப் படை அதிகாரி கிரண் தமாங் படுகாயமடைந்தார்.

போராட்டத்துக்கு தீவிரவாதி களின் சதி இருப்பதாகவும், சில வெளிநாடுகளின் ஆதரவு இருப்பதாகவும் முதல்வர் மம்தா குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், அங்கு நிலைமை யைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் படையும், ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் கின் மத்திய சவுக் பஜார் பகுதியில் போராட்டத்தின் போது இறந்தவரின் உடலை ஊர்வலமாக எடுத்து வந்து ஜிஜேஎம் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் இணக்கமான சூழலில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முன் வரவேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் வன்முறையை கையாள்வதால் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவாது. எந்தப் பிரச் சினையையும் இருதரப்பு பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க முடியும். டார்ஜிலிங் மக்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம், என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, நேற்று காலை முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தற்போதைய நிலவரம் பற்றி ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

இந்நிலையில், ஜிஜேஎம் தலைவர் பிமல் குரூங் கூறுகையில், ‘எங்களது போராட்டத்தைத் தொடருவோம். பாதுகாப்புப் படையினர் தடுக்க முயற்சித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்’ என எச்சரிக்கை விடுத்திருப்பது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in