

பிரிட்டனின் மேன்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் மேன்செஸ்டர் நகரில் அரியானா கிராண்டே அரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 22 பேர் பலியாகினர், 59 பேர் காயமடைந்தனர்.
கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் பிரிட்டனில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவே.
இந்நிலையில், இச்சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சோனியா காந்தி, "மேன்செஸ்டர் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத்தின் கோர பிடியை எதிர்த்து மதங்கள், எல்லைகள் தாண்டி சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.