

நீதிமன்றங்களில் பெண்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை நாட்டிலேயே மகாராஷ்டிராவில் அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில், 1 லட்சத்து 35 ஆயிரம் வழக்குகள் பெண்களால் தொடரப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் ‘இகமிட்டி’ வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ள 2.18 கோடி வழக்குகளில், 20,94,086 வழக்கு கள் (9.58 சதவீதம்) பெண்களால் தொடரப்பட்டவை. மகாராஷ்டிரா வில் அதிகபட்சமாக 2,55,122 வழக்குகளை பெண்கள் தொடர்ந் துள்ளனர். இரண்டாமிடத்தில் உள்ள பிஹாரில் 2,16,599 வழக்குகளும், மேற்குவங்கத்தில் 1,74,327 வழக்கு களும், கர்நாடகாவில் 1,46,959 வழக்குகளும், தமிழகத்தில் 1,35,033 வழக்குகளும் பெண்களால் தொடரப்பட்டுள்ளன.
அதேபோல் மூத்த குடிமக்களால் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, 6,96,704 ஆக உள்ளது. நிலுவையில் உள்ள மூத்த குடிமக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் மட்டும் 12.77 சதவீத மாகும். நிலுவையில் உள்ள வழக்கு களைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நிலவரப்படி, உ.பி.யில் 51,13,978 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 29 லட்சமும், மேற்குவங்கத்தில் 13 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.