காசியாபாத் அருகே லக்னோ மெயில் தடம் புரண்டு விபத்து

காசியாபாத் அருகே லக்னோ மெயில் தடம் புரண்டு விபத்து
Updated on
1 min read

திங்கள்கிழமை காலை உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் அருகே லக்னோ மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயிலின் ஏ.சி. பெட்டிகள் 3 தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.விபத்து காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில்கள் சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டன.

ரயில் விபத்து குறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நீரஜ் சர்மா கூறியதாவது: "காலை 6.20 மணிக்கு ரயில் காசியாபாத் வந்தடைந்தது. இன்ஜினில் இருந்து 7-வதாக இணைக்கப்பட்டிருந்த பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது. தொடர்ந்து 2 பெட்டிகள் தடம் புரண்டன. தடம்புரண்ட மூன்று பெட்டிகளும் ரயிலில் இருந்து நீக்கப்பட்டு ரயில் டெல்லி புறப்பட்டுச் சென்றது. விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in