

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை உளவுத் துறை யினர் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் பாகிஸ்தானின் சங்கத் மாவட்டத்தை சேர்ந்த நந்தலால் மெகவால் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இம்மாத தொடக்கத்தில் விசா மூலம் இந்தியா வந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் யு.ஆர்.சாகு கூறும்போது, “ரகசிய தகவலின் பேரில் ஜெய்சல்மார் நகரில் ஒரு ஹோட்டலில் இவரை உளவுத் துறையினர் பிடித்தனர். இவரிடம் இருந்து ரகசிய தகவல்கள் அடங்கிய மெமரி கார்டு, ராணுவ கட்டிடங்கள் மற்றும் வாகனங் களின் புகைப்படங்கள் இருந்தன. வியாழக்கிழமை இரவு கைது செய் யப்பட்ட மெகவால், விசாரணைக் காக ஜெய்ப்பூர் கொண்டுவரப் பட்டுள்ளார். முதல்கட்ட விசா ரணையில், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் சமூக விரோத சக்திகள் மற்றும் கடத்தல் காரர்களிடம் மெகவால் பாகிஸ் தானில் இருந்து தொடர்பிலிருந்து வந்தது தெரியவந்துள்ளது.
பொருட்களை மலிவான கட் டணத்தில் கடத்துவதற்கு பிரதிபல னாக இந்திய ராணுவம் குறித்த தகவல்களை அவர் திரட்டி ஐ.எஸ். உளவாளிகளிடம் தந்துள்ளார். வாட்ஸ் அப், ஃபேஸ் புக் மற்றும் ஸ்கைப் மூலம் இவர் இந்திய எல்லைப் பகுதிகளில் இருந்து தகவல் பெற்று வந் துள்ளார்” என்றார்.