வரிப்பணம் வீணாவதைத் தடுக்க ஆதித்யநாத்தை பின்பற்ற தமிழக அரசு முன்வருமா?

வரிப்பணம் வீணாவதைத் தடுக்க ஆதித்யநாத்தை பின்பற்ற தமிழக அரசு முன்வருமா?
Updated on
1 min read

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பின்பற்றி மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க தமிழக அரசு முன்வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசியல் பிரமுகர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள்:

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:

மக்கள் பணம் வீணடிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசியல் எதிரியாக இருந்தாலும் அகிலேஷ் யாதவ் படம் பொறிக் கப்பட்ட புத்தகப் பைகளை மாணவர்களுக்கு வழங்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட் டுள்ளார். இது அவரது பெருந்தன்மையையும் அரசியல் நாகரிகத்தையும் காட்டுகிறது.

தமிழகத்தில் மாற்றுக் கட்சித் தலைவரின் பெயர் பாடப் புத்தகத்தில் இருந்தது என்பதற்காக பக்கங்களை கிழித்த வரலாறு உண்டு. இரு திராவிடக் கட்சிகளின் ஈகோ பிரச்சினையால் மக்கள் பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் வழியைப் பின்பற்றி தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் பணம் வீணாவதைத் தடுக்க வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் :

புத்தகப் பைகள் வீணாகக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கே வழங்குவது நல்ல விஷயம். மக்கள் வரிப் பணத்தில் வழங்கப்படும் திட்டங்கள், பொருட்களுக்கு முதல்வரின் படம் இடம் பெறுவதை தவிர்ப்பது நல்லது. இதனை செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்வந்தால் வரவேற்கலாம்.

தனி மனிதரை துதிபாடும் அரசியல் கலாச்சாரம்தான் தமிழகத்தில் இதுவரை இருந்தது. இனி இந்த கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்கள் வரிப் பணத்தில் தங்களைப் பற்றி விளம்பரம் செய்வதை கைவிட வேண்டும். அகிலேஷ் யாதவ் கொண்டு வந்த பல தவறான திட்டங்களை யோகி ஆதித்யநாத் அரசும் தொடர்ந்து வருகிறது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in