

எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்வதால் அங்கு தினமும் சாவை எதிர்நோக்கி மரண பீதியுடன் வாழ்வதாக கிராமவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்திய எல்லையில் அர்னியா, ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தினமும் இத்தகைய வேதனையை அனுப்பவிக்க முடியாது அரசு தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கிராமவாசி ரனோ தேவி தெரிவித்தார்.
இதேபோல், பிண்டி கிராமத்தைச் சேர்ந்த கரண் சிங் என்பவர் கூறும்போது, "ஒவ்வொரு முறை பாகிஸ்தான் தரப்பில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் எங்கள் வீடுகளை துளைக்கும்போது அச்சத்தில் உறைந்து போகிறோம். எப்போது வேண்டுமானாலும் சாவு நெருங்கும் என்ற உணர்வு எங்களை அச்சுறுத்துகிறது என கண்ணீர் மல்க" கூறினார்.