Last Updated : 26 Jun, 2016 04:19 PM

 

Published : 26 Jun 2016 04:19 PM
Last Updated : 26 Jun 2016 04:19 PM

எமர்ஜென்சியும், பொற்கோயில் நடவடிக்கையும் காங்கிரஸ் வரலாற்றில் அழியாத கறை: அருண் ஜேட்லி

‘‘இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியை காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்தியது. இந்தியாவை குடும்ப ஆட்சிக்குள் கொண்டு வந்தது. ஊழலை கொண்டு வந்தது’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில், ’41 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி பிறப்பித்த சட்டப்பூர்வ சர்வாதிகாரம்’ என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. ‘‘நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என்று அவர் போலி விளக்கம் அளித்தார். உண்மையில் அவருடைய பிரதமர் பதவிக்குதான் ஆபத்து இருந்தது. ஏனெனில், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதான வழக்கில், இந்திரா காந்தியின் எம்.பி. பதவியை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதனால், நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார்.

அதன்பிறகு நாட்டில் சர்வாதிகாரம் நடந்தது. அரசியல் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் சித்ரவதைகள் அனுபவித்தனர். பத்திரிகைகள் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகள் இல்லாமல் நாடாளுமன்றம் இருந்தது. தன்னுடைய மகன் சஞ்சய் காந்தியை அடுத்த வாரிசாக முன்னிலைப் படுத்தினார். காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சி ஜனநாயகம் இல்லை.

சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை பார்ப்பவர்களுக்கு அக்கட்சி மீது பல கறைகள் படிந்திருப்பதை அறிவார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்தியது. மேலும், குடும்ப ஆட்சிக்குள் இந்தியாவை கொண்டு வர முயற்சித்தது. ஊழல் அதிகரிக்க காரணமாக இருந்தது. இவை எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அழிக்க முடியாத கறைகள். மேலும், பொற்கோயிலில் புளூ ஸ்டார் ஆபரேஷன் நடத்தியது மற்றொரு கறை. இந்த விஷயங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது கருத்து இருக்கிறதா?

இவ்வாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x