

காஷ்மீர் கலவரங்களில் நடந்த கல்வீச்சு சம்பவங்களுக்க்கு 3,550 போலீஸாரும், 2,309 சாதாரண அப்பாவி மக்களும் காயமடந்துள்ளனர்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் இது குறித்து தகவல் அளிக்கையில், மொத்தம் 1029 கல்லெறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்றார்.
2015-ம் ஆண்டு 730 தீவிர போராட்டங்கள் வெடித்தன என்றும் இதில் 5 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு சுமார் 240 பேர் காயமடைந்துள்ளனர். தவிர, 886 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனை தவிர்க்க போலீஸ்-பொதுமக்கள் சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன என்று கூறினார் மத்திய அமைச்சர்.
மேலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தருணங்களில் கடுமையான ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ஆயுதப்படையினரை அறிவுறித்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் ஜூலை 17 முடிய 152 பயங்கரவாத வன்முறைகள் நிகழ்ந்துள்ளன, இதில் 30 பாதுகாப்பு படையினர் பலியாகியுள்ளனர்.
2015-ம் ஆண்டில் 208 முறை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதாகவும் இதில் 39 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாகவும் அமைச்சர் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதில் அளிக்கையில் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீருக்குள் 90 முறை பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாகவும் இதில் 54 முறை அவர்கள் ஊடுருவியதாகவும் இதில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மேலும் 26 பேர் தப்பிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.