

தாமதிக்காமல் ஊதியம் வழங்கும் கோரிக்கையை, அரசியல் கட்சிகள் தம் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாபின் பரீத்கோட் மாவட்ட துப்புரவுப் பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கோட்புரா முனிசிபல் துப்புரவுப் பணியாளர் சங்கத்தின் துணைத்தலைவரான அவினேஷ் சவுகான் கூறுகையில், ‘ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெற நாங்கள் பல மாதங்களாக போராட வேண்டி உள்ளது. கடைசியாக நாங்கள் ஜனவரி மாதம் வரையிலான ஊதியம் மட்டுமே பெற்றோம்.’ எனக் கூறினார்.
இந்த அலுவலகப் பணியாளர் களின் வருங்கால வைப்பு நிதி அன்றாட அலுவலக செலவு களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் இதை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அலுவலகத்தின் உயர் அதிகாரிகளின் சொத்துகளை கையகப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டதாகவும் சவுகான் தெரிவித்தார்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்ப அந்த உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கான டிரஸ்டிடம் இருந்து ஆறு கோடி ரூபாயை கடனாகப் பெற்றது. தற்போது, அதன் தவணைத் தொகையான ரூ. 33 லட்சத்தை கட்டுவதிலும் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி அந்த முனிசி பல் அலுவலக அதிகாரியான ஹர்ஜித்சிங் சித்து செய்தியாளர் களிடம் கூறுகையில், ’விதிமுறை களை பின்பற்றுவதில் வந்த சில சிக்கல்களின் காரணமாக இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மாநில அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வந்தால் நிலைமை சரியாகிவிடும்’ என்றார்.