சீன எல்லையில் ரூ.175 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்: ராஜ்நாத் சிங்

சீன எல்லையில் ரூ.175 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் 53-வது ஆண்டு தினம் டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய் டாவில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

எல்லையில் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை மீறும்போதும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவும்போதும் இயல்பாக கோபம் எழுகிறது. இத்தகைய அத்துமீறல்களை சகித்துக் கொள்ள முடியாது.

நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க சீனாவுடனான அருணாசலப் பிரதேச எல்லையில் இந்திய ராணுவத்தின் சார்பில் 54 புதிய எல்லைச் சாவடிகள் அமைக்கப்படும். மேலும் அப்பகுதியில் ரூ.175 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சீன ராணுவத்தின் சார்பில் எல்லைப் பகுதியில் விமானத் தளம், ரேடார் கருவிகள் நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை உள்பட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நொய்டாவில் நேற்று நடைபெற்ற இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in