

சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா- டிஎல்எப் நிலபேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த தில் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ள தால், இப்புகாரைத் தெரிவித்த நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத் தியுள்ளது.
டிஎல்எப் நிறுவனத்துக்கும் ராபர்ட் வதேராவுக்கும் இடையே நில பேரம் நடைபெற்றதில் முறை கேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஹரி யாணா மாநில அரசு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கள்கிழமை தேர் தல் பிரச்சாரத்தின்போது பேசியிருந் தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “ராபர்ட் வதேரா-டிஎல்எப் இடையிலான நில பேரத் துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்ததில் எவ்வித விதிமீறலும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா நேற்று கூறும்போது, “தொடர்ந்து தவறான குற்றச்சாட்டு களைக் கூறி வருவதன்மூலம் தனது பிரதமர் பதவிக்கு தர்மசங்கடமான சூழலை நரேந்திர மோடி ஏற்படுத்தி வருகிறார். இதனை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் மூலம் பாஜகவின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. தேசத்தின் பிரதமராக இருக்கும் மோடி, ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மீது குற்றச்சாட்டுகளைக் கூறி, பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டார். தற்போது, தவறான தகவலைக் கூறியதற்காக அவர் ஹரியாணா மக்களிடமும் முதல் வரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்.