மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக மீனவர்கள் சுஷ்மாவுடன் 30-ல் சந்திப்பு: ரயில் மறியல் போராட்டம் தள்ளிவைப்பு

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக மீனவர்கள் சுஷ்மாவுடன் 30-ல் சந்திப்பு: ரயில் மறியல் போராட்டம் தள்ளிவைப்பு
Updated on
1 min read

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, தமிழக மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வரும் 30-ம் தேதி டெல்லியில் சந்தித்து பேசுகின்றனர்.

மீன்பிடி தடை காலம் முடிவடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால், மே 30-ல் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர், ஜுன் 2-ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், ஜுன் 5-ல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 4 பேர், ஜுன் 9-ல் ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர், ஜுன் 16-ல் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் என அடுத்தடுத்த 5 தனித்தனி சிறைபிடிப்பு சம்பவங்கள் மூலம் 24 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய சிறைகளில் அடைத்துள்ளனர்.

இருப்பினும் 93 தமிழக மீனவர்களின் படகுகள் மன்னார், யாழ்ப்பாணம், புத்தளம், திரிகோணமலை கடற்படை முகாம் களில் உள்ளன. இந்த படகுகள் தற்போது சேதமடைந்து வருகிறது. இப்படகுகளை மட்டுமே நம்பி யுள்ள 500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப் பட்ட படகுகளை விடுவிக்கவும், இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தவும், மீனவர்கள் பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி திமுக மாநிலங் களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் தமிழக மீனவப் பிரநிதிகள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வரும் 30-ம் டெல்லியில் சந்திக் கின்றனர்.

இதை முன்னிட்டு இன்று நடை பெறுவதாக இருந்த ரயில் மறியல் போராட்டத்தை தள்ளிவைத்துள்ள தாக ராமேசுவரம் மீனவ சங்கங்கள் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in