நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: அருணாச்சலப் பிரதேசம், காஷ்மீர் விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: அருணாச்சலப் பிரதேசம், காஷ்மீர் விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
Updated on
2 min read

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேச அரசியல், காஷ்மீர் வன்முறை உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட் டுள்ளன. இதனிடையே, ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற ஒத் துழைப்பு வழங்குமாறு அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்நிலையில், டெல்லி யில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ஆனந்த் குமார் மற்றும் 30 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 45 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக ஆக்கப் பூர்வமான விவாதம் நடத்தவும், மசோதாக்களை நிறைவேற்றவும் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டால், எந்த அரசுக்கு புகழ் கிடைக்கும் என்பது பிரச்சினை இல்லை. நாட்டு நலனுக்காக இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம்.

காஷ்மீர் கலவரம் குறித்து பல்வேறு கட்சிகளும் ஒரே குரலில் தங்கள் கருத்துகளை வெளியிட்டன. இதனால் நாடு பயனடைந்துள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி உட்பட 16 மசோதா

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறிப்பாக, அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

அனைத்துக்கட்சி கூட்டம் திருப்தி கரமாக இருந்தது. நாடாளுமன்றத் தில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயா ராக உள்ளதாக உறுதி அளித்துள் ளோம். இதுபோல, நாடாளுமன் றத்தை சுமுகமாக நடத்த ஒத் துழைப்பு தருவதாக எதிர்க்கட்சி யினரும் உறுதி அளித்துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் மற் றும் அதனால் நம் நாட்டுக்கு ஏற்பட உள்ள தாக்கம், வெளியுறவுக் கொள்கை, பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை பற்றி இந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் எதிர்க்காது

இதுகுறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) கூறும் போது, “மாநிலங்களுக்கு இடையி லான கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும் என்று வலியுறுத்தி னார். ஆனால், அதற்கு மாறாக உத்தராகண்ட் மற்றும் அருணாச் சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க மத்திய அரசு பல் வேறு முயற்சிகளை மேற்கொண் டது. இதை உச்ச நீதிமன்றம் தலை யிட்டு தடுத்தது. மேலும் நாடாளுமன் றத்தில் எந்த ஒரு மசோதாவையும் எதிர்க்க மாட்டோம். நாட்டு மக்களின் நலனுக்கு பயன்தரக்கூடிய மசோதாவாக இருந்தால் ஆதரவு அளிப்போம்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “ஜிஎஸ்டி மசோதா விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் சூதாட்டம் ஆடுகின்றன” என்றார்.

காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளை மத்திய அரசு கவிழ்க்க முயன்ற விவகாரம், காஷ்மீரில் தொடரும் வன்முறை, அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராகும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி, பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்த கூட்டத் தொடரில் எத்தகைய அணுகு முறையை கடைபிடிப்பது என்பது குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in