

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து 4 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து ‘ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது’ என்று மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், சிறப்பு வழக்கறிஞராகவும் இருந்த பி.வி.ஆச்சார்யா ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஊழல் குற்றவாளிகளுக்கு அனுப்பிய நிச்சயமான செய்தியே’ என்றும் தெரிவித்தார்.
நாட்டின் சட்டங்களிலிருந்தும் நீதி அமைப்பிலிருந்தும் குற்றம் செய்த யாரும் தப்ப முடியாது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததில் கணக்குத் தவறு ஏற்படவில்லையெனில் உயர் நீதிமன்றமே ஜெயலலிதா உள்ளிட்டோரை தண்டித்திருக்கும் என்றார்.