

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள யுரி பகுதியில் ராணுவ முகாம் மீது ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகர், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், ராணுவ தளபதி தல்பிர் சிங் போன்றோர் கலந்து கொண்டனர்.
இதில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், திங்கட்கிழமை ஜம்மு காஷ்மீரின் எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.