

டெல்லியில் புதிய கார்களுக்கான பேன்சி எண்களை மொத்தம் ரூ. 74 லட்சத்துக்கு வாகன உரிமையாளர் கள் ஏலத்தில் எடுத்துள்ளனர்.
இது குறித்து டெல்லி வாகனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: “இந்த ஏலம், மூன்று நாட்கள் நடைபெற்றது. ரூ. 5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்ட 0001 என்ற எண், கடைசி நாள் ஏலத்தில் ரூ. 12.5 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. 0009 என்ற எண், ரூ. 8.25 லட்சம் விலைக்கு ஏலம் போனது. இந்த இரண்டையும் டெல்லியின் இரு தனியார் நிறுவன உரிமையாளர்கள் ஏலத்தில் எடுத்தனர்” என்றனர்.
அதே போன்று, மொத்தம் 29 கார்களின் பேன்சி எண்களை ஏலம் விட்டதில் டெல்லி வாகன போக்குவரத்துத் துறைக்கு ரூ. 74.40 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.