Published : 24 Aug 2016 10:19 AM
Last Updated : 24 Aug 2016 10:19 AM

ஆரோக்கிய உணவுப் பட்டியல் பள்ளிச் சிறார்களுக்கு தயாராகிறது: உணவுப் பாதுகாப்பு, தர ஆணையம் நடவடிக்கை

பள்ளி அளவில் சிறார்கள் மத்தியில் ஆரோக்கிய உணவு முறையை மேம்படுத்த, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) திட்டமிட்டுள்ளது. அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை உள்ள மோசமான உணவுகளின் பட்டியலைத் தயாரித்து, பள்ளி அளவில் இவை கிடைப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கவும் எஃப்எஸ்எஸ்ஏஐ ஆயத்தமாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தலைமைச் செயல் அலுவலர் பவன் அகர்வால் நேற்று கூறியதாவது:

ஆரோக்கியமான, திறன் வாய்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பள்ளி அளவிலான குழந்தைகள் மனதில் ஆழப் பதியவைக்கும் வழிமுறை களை எஃப்எஸ்எஸ்ஏஐ வரை யறுத்து வருகிறது.

அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதிக எனர்ஜி கொண்ட ஆனால், குறைவான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகளைக் கொண்ட மோசமான உணவு வகைகளின் பட்டியலை ஆணையம் தயாரித்து வருகிறது.

உடல் நலத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை உண் டாக்கக் கூடிய, இளம் தலை முறைக்கு ஒவ்வாத உணவு வகைகள் இப்பட்டியலில் இடம் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதுதொடர் பான வழக்கில் டெல்லி உயர் நீதி மன்றம், “பள்ளி வளாகங்களுக்கு அருகில் சிப்ஸ், பொறிக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப் பட்ட பானங்கள் போன்ற அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை கொண்ட உணவு வகைகளை விற்பனை செய்வதற்கு கட்டுப் பாடு விதிப்பதன்மூலம், பள்ளி மாணவர்கள் ‘ஜங்க் புட்’ எனப் படும் துரித உணவுகளை உட் கொள்வதை ஒழுங்குமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்கும்படி” எஃப்எஸ்எஸ்ஏஐ-க்கு உத்தர விட்டது.

இதைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் கிடைக்கும் ஊட்டச் சத்துகள் நிறைந்த உணவுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை வரைவை எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டது.

“உணவுகளைத் தேர்வு செய்வதில் குழந்தைகள் சிறப்பானவர்கள் அல்ல” என்றும், அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை கொண்ட உணவு வகைகளை விற்பதற்கு பள்ளி வளாகங்கள் பொருத்தமான இடம் அல்ல” என்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ தெரி வித்தது.

“பள்ளிகளில் உள்ள கேன்டீன் களை வர்த்தக கடைகளைப் போல கருதக் கூடாது. ஊட்டச் சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவுகளை விற்பனை செய் யும் வகையில் கேன்டீன் கொள் கைகளைப் பள்ளிகள் வகுக்க வேண்டும். அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களைப் பள்ளி மற்றும் பள்ளி வளாகத்துக்கு 50 மீட்டர் தூரத்துக்குள் விற்பனை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன” என எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x