Last Updated : 23 Jul, 2016 10:20 AM

 

Published : 23 Jul 2016 10:20 AM
Last Updated : 23 Jul 2016 10:20 AM

ஜாதி, பாரபட்ச அரசியலை உதறி தள்ள வேண்டும்: இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

ஜாதி மற்றும் பாரபட்ச அரசியலை இளைஞர்கள் உதறி தள்ளி விட்டு, வளர்ச்சிக்கான அரசியலுக்கு ஆதரவு அளிக்க முன் வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கோரக்பூரில் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் நலி வடைந்த உரத் தொழிற்சாலையை புதுப்பிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜாதி மற்றும் பாரபட்ச அரசியல் ஒருபோதும் வளர்ச்சிக்கு உத வாது. இளைஞர்கள் வளர்ச்சிக் கான அரசியலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு அளித்த அதே ஆதரவை, வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலிலும் அளிக்க வேண்டும்.

குடும்ப மற்றும் ஜாதி அரசி யலுக்கு இதுவரை நீங்கள் அளித்து வந்த ஆதரவு போதும். ஒவ்வொருவரையும் நீங்கள் ஆதரித்தீர்கள். ஆனால் உங்களுக்கு ஆதரவு கிடைத்ததா? இளைஞர்களும், விவசாயிகளும் பலன் பெற்றார்களா?

மாநிலத்தின் சுகாதாரத்துக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.7,000 கோடியில், வெறும் ரூ.2,850 கோடியை மட்டுமே மாநில அரசு செலவு செய்துள்ளது. சுகாதார துறையை முன்னேற்றாத ஒரு மாநில அரசின் ஆட்சி இனியும் தொடர வேண்டுமா? எனவே இளைஞர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அயோத்தி ராமர் கோயில் போராட்டத்தை முன்னின்று நடத்தியவரும், பாஜக சார்பில் 4 முறை எம்பியாக தேர்ந்தெடுக் கப்படவருமான கோரக்பூர் கோயில் பூசாரியான யோகி மஹந்த் அவைதியநாத் சிலையையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத் தார். அப்போது அவர், ‘‘நவீன இந்தியாவை உருவாக்க துறவி களும், பல்வேறு மத குருமார் களும் முக்கிய பங்காற்ற வேண்டும். குறிப்பாக கழிவறைகள் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்து நடத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x