‘பீம்’ செயலியை பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்: என்சிசி அணிவகுப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

‘பீம்’ செயலியை பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்: என்சிசி அணிவகுப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் இது வெற்றிபெற இளைஞர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில் டெல்லியில் நேற்று நடந்த பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

என்சிசி மாணவரின் வாழ்க்கை என்பது சீருடை, அணிவகுப்பு மற்றும் முகாம்கள் இதையெல்லாம் தாண்டியது ஆகும். இதில் கிடைக்கும் அனுபவம், நமக்கென ஒரு முக்கிய பணி ஒப்படைக் கப்பட்டுள்ளது என உணர வைக்கி றது. மேலும் இந்த அனுபவத்தின் மூலம் நாட்டின் வலிமை மற்றும் பன்முகத்தன்மையை நினைவுகூர முடிகிறது.

மன்னர்கள், பேரரசர்கள், ஆட்சியாளர்கள், அரசுகளால் ஒரு நாட்டை உருவாக்க முடியாது. குடிமக்கள், இளைஞர்கள், விவசாயிகள், கல்வியாளர்கள், விஞ் ஞானிகள் ஆகியோரால் முடியும். உங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவே உணர்கிறேன். இளைஞர்களின் சக்தியை பெருமையாகக் கருதுகிறேன்.

தூய்மை இந்தியாவை உருவாக்குவதில் உங்களுடைய பங்களிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. குறிப்பாக இந்திய இளைஞர்களான நீங்கள் தொழில்நுட்பத்தை விரைவாக கற்றுக் கொள்கிறீர்கள்.

இன்றைய காலகட்டத்தில் ரொக்கப் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாற வேண்டியது அவசியமாகிறது. எனவே இது தொடர்பான அரசின் முயற்சிக்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

பணத்தை அச்சடிப்பது, ஏடிஎம் களை பாதுகாப்பது என என ஏராள மான பணம் செலவிட வேண்டி உள்ளது. ஆனால், ரொக்கப் பயன்பாட்டை குறைத்துக் கொண் டால் ஏராளமான பணத்தை மிச்சப் படுத்த முடியும். அந்தப் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு வீடு, கல்வி, மருத்துவ உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கித் தர முடியும்.

எனவே, அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘பீம்’ என்ற செல்போன் செயலியை இளைஞர் கள் பதிவிறக்கம் செய்துகொண்டு அதன்மூலம் ரொக்கமில்லாமல் செலவிட முன்வர வேண்டும்.

100-க்கும் மேற்பட்ட மொழிகள், பல்வேறு பழக்கவழக்கங்கள், பல்வேறு மதங்கள் இருந்தபோதும் இந்தியர்கள் ஒற்றுமையாக வாழ்வதைக் கண்டு உலகம் வியக்கிறது. இதுதான் நமது பலம். இதை நாம் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in