

பாலியல் வன்முறையால் பாதிக் கப்பட்ட பெண்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் நிர்பயா நிதி உதவியின் கீழ் 18 உதவி மையங் கள் செயல்படுவதாக அரசு தெரி வித்திருந்தது. இந்நிலையில் ஒரே யொரு மையம் மட்டுமே இயங் குவதாக தன்னார்வ தொண்டு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுவீதி யில் வீசப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இதையடுத்து, பாலியல் பலாத்காரம், குடும்ப வன்முறை, மனஅழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான மருத்துவ உதவி, மனநலம் மற்றும் சட்ட ஆலோ சனைகள், தற்காலிக தங்குமிட வசதிகள் ஆகியவற்றை வழங்க நாடு முழுவதும் நிர்பயா நிதியின் கீழ் ‘ஓன் ஸ்டாப்’ மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் முதல் மையம் தொடங்கப்பட்டது. அதன் பின், நாடு முழுவதும் மேலும் 17 மையங்கள் திறக்கப்பட்டன. வரும் ஏப்ரல் 2017-க்குள் கூடுத லாக 150 மையங்களும், அதன் அடுத்தகட்டமாக 640 மாவட்டங் களிலும் இத்தகைய மையங்கள் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில் ஒரேயொரு மையம் மட்டுமே முழுவீச்சில் இயங்கி வருவதாக அமன் சத்யா கச்ரூ அறக்கட்டளை யின் நிறுவனர் ராஜேந்திர கச்ரூ குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது: நிர்பயா நிதி அமைப்பின் கீழ் அமைக் கப்பட்ட 18 உதவி மையங்களில், 17 மையங்கள் இயங்கவே இல்லை. பெரும்பாலான மையங் களில் பெயர் பலகைகள் மட்டுமே உள்ளன. ஒரு சில மையங்களில் மேஜைகளும், கோப்புகளும் மட்டுமே இருக்கின்றன. சுமாராக செயல்படும் மையங்களில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இல்லை. தவிர எந்த வொரு மையத்திலும் பாதிக்கப் பட்ட பெண்கள் குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்ட தகவல்களும் இல்லை. ராய்ப் பூரில் உள்ள மாதிரி மையத்தில் மட்டுமே அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த திட்டம் முறையாக செயல்படுகிறதா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு ராஜேந்திர கச்ரூ கூறினார்.