ஜனவரி 26-க்குள் 1 கோடி உறுப்பினர்கள்: கேஜ்ரிவால் நம்பிக்கை

ஜனவரி 26-க்குள் 1 கோடி உறுப்பினர்கள்: கேஜ்ரிவால் நம்பிக்கை
Updated on
1 min read

ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கும் பணியை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 4,5 தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது நாள் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, உறுப்பினர் சேர்க்கும் பணி இன்று முறைப்படி தொடங்கியது. இந்தப் பணியை துவக்கி வைத்த கேஜ்ரிவால், ஜனவரி 26-ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சிக்கு புதிதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதே தங்கள் இலக்கு என தெரிவித்தார்.

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ்: "ஆம் ஆத்மி கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் ஜனவரி 10 முதல் 26-ஆம் தேதி வரை உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு "நானும் சாதாரண மனிதன்" என பெயரிடப்பட்டுள்ளது. மக்கள் ஆம் ஆத்மியில் வெறும் பெயரளவில் மட்டும் தங்களை இணைத்துக் கொள்ளாமல், நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு சேர வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

குறைந்த பட்சம் 300 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி தயாராகி வருகிறது என்றும் 15 முதல் 20 மாநிலங்களில் தேர்தல் களம் காண தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை மார்ச் மாதம் இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in