காஷ்மீரில் ரோந்து வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி; காயம் 5

காஷ்மீரில் ரோந்து வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி; காயம் 5
Updated on
1 min read

காஷ்மீரில் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான பாதுகாப்பு வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 5 வீரர்கள் காயமடைந்தனர்.

தெற்கு காஷ்மீரின் காசிகுண்ட், ஹில்லார் பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கூடுதல் படைகள் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in